கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் அகண்ட பாரதத்தை நிறைவேற்ற
சபதம் எடுக்கும் நாளாம்! (15.1.1949)
காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் செயலை கொண்டாடும் ஹிந்துத்துவ அமைப்பினர் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான “நவம்பர் 15-ஆம் தேதியை” ‘தியாகிகள் தினம்’ (ஷகித் திவஸ்)’ என்றும் கடைப்பிடித்து – இந்த நாளில் அகண்ட பாரதம் அமைக்க கோட்சே படத்தின் முன்பு சபதம் எடுப்பார்களாம்!
கோட்சே மற்றும் அவரை ஆதரிக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள், காந்தியார் ஹிந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்றும், அகண்ட பாரத கனவு நிறைவேறாமல் போன தற்கும் ‘இந்தியா-பாகிஸ்தான் பிரிவி னைக்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என்றும் ஹிந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு பெரும் தடையாக காந்தியார் இருந்ததாகவும் கருதுகின்றனர்.
கோட்சேவின் பார்வையில், காந்தியின் கொள்கைகளால் ஹிந்துக் களின் நலன்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே அவர் காந்தியைக் கொன்றதாகக் கூறினார்.‘ நான் ஹிந்துக் களுக்காக எனது உயிரைத் தியாகம் செய்யத் தயராக உள்ளேன்’ என்று கூறினார் ‘தேசத்தின் நலனுக்காக காந்தியாரைக் கொன்று என் உயிரைத் தியாகம் செய்துள்ளேன்’ என்று கூறிய கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்த நாளை ‘தியாகிகள் தினம்’ என்று கொண்டாடுகின்றனர்
விஷ்வ ஹிந்து பரிஷத்தும், பல சில்லரை ஹிந்து அமைப்புகளும் தாங்களாகவே புதிய பாலங்களுக்கு கோட்சே பெயர் வைத்த பதாகைகளை வைக்கிறார்கள், இந்த நாளில் பட்டினி இருந்து கோட்சேவின் நிழற்ப்படத்திற்கு முன்பு அகண்ட பாரதம் அமைப்போம் என்று சபதம் செய்கிறார்கள்.
காவல்துறை வந்த பிறகு அந்த இடத்தில் இருந்து ஓடிவிடுகிறார்கள். வழக்கமாக ஹிந்து அமைப்புகள் நடத்தும் நாடகம் தொடர்கதையாகி உள்ளது
இந்த ஆண்டு அரியானா மாநிலம் குருஷேத்திராவில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் “அகண்ட பாரத நாடகம்” இன்று நடைபெறும் என்று ராஷ்டிரிய ஹிந்து சேவா மஞ்ச் சமூகவலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.,
அதில் நாதுராம் கோட்சே படம் இடம் பெற்றால் காவல்துறை தடை செய்யும் என்று காவல்துறை பள்ளி நிர்வாகத்திடம் கூறியதாக குருஷேத்திராவைச் சேர்ந்த ஊடக வியலாளர் தனது சமூகவலை தளப் பக்கத்தில் (இன்ஸ்டா) வெளி யிட்டிருந்தார்.
கேட்சேயின் சாம்பலை இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது – எச்சரிக்கை.
காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் இன்று (15.11.1949)
