திராவிட இயக்கப் ‘‘போர்வாள்’’ – ஜாக்கிரதை!
திராவிட இயக்கத்தவர் எதைச் செய்தாலும், அதன் மீது குறை சொல்வதும், திசை திருப்பும் முடக்குவாதங்களை முன் வைப்பதும்தான் பார்ப்பன ‘தினமலர்’ வகையறாக்களின் குறுக்குப் பூணூல் புத்தி.
‘‘திராவிட இயக்கப் போர்வாள்’’, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மானமிகு வைகோ மேற்கொள்ளவிருக்கும் நடை பயணம் குறித்து இன்றைய ‘தினமலர்’ (15.11.2025 பக்.8) பதிவு இதோ!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: ஜன.,2ஆம் தேதி, திருச்சி உழவர் சந்தையில் இருந்து, தன் தலைமையில் நடக்க உள்ள சமத்துவ நடைபயணத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
ஜன., 12ம் தேதி மதுரையில் நடைபயணத்தை நிறைவு செய்கிறோம். கோவையில் மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம் போல பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் நடைபயணத்தின் நோக்கம். என் அரசியல் வாழ்க்கையில், இது ஒன்பதாவது நடைபயணம்.
டவுட் தனபாலு: ‘டாஸ்மாக்’ மூடல், முல்லை பெரியாறு உட்பட பல பிரச்னைகளை வலியுறுத்தி, இதுவரை எட்டு நடைபயணங்களை நடத்தினீங்களே… அந்த நடைபயணங்களால, அந்த விவகாரங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைச்ச மாதிரி தெரியலையே … அதே மாதிரி இந்த நடைபயணமும் ஆகிடாம இருக்குமா என்ற, ‘டவுட்’தான் வருது!
நடைபயணம் மேற்கொள்வது என்பது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கே! இதில் இலாப நஷ்டம் பார்ப்பது என்பது – கடவுள் பொம்மையை வைத்தே லாபம் சம்பாதிக்கும் பார்ப்பனப் புத்தி!
‘பக்தர்களே, காணிக்கையை உண்டியலில் போடாமல் அர்ச்சனைத் தட்டில் போடுங்கோ!’ என்று சொன்ன ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்களைப் பற்றி ஒரு வரி கமென்ட் அடித்தது உண்டா ‘தினமலர்’ வகையறாக்கள்?
இது – திராவிட இயக்கப் ‘‘போர்வாள்!’’ ஜாக்கிரதை!
