முதியவர்கள் கவனத்துக்கு! முதியவர்களை தாக்கும் மூச்சு குழாய் நோய்த்தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பயனாளிகள் அதிகரிப்பு

சென்னை, நவ.15- சென்னையில் மூச்சு கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் மூச்சுக்குழாய் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

நோய்த்தொற்று

லேசான மூச்சுக்குழாய் அறிகுறிகள், தும்மல், நீர்க் கோழை, வறண்ட இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றுடன் மீண்டு வருகிறார்கள். ஆனால் இணை நோய்கள் உள்ள முதியவர்கள் அதி தீவிர அறிகுறிகளுடன் நிமோனியா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மூச்சுக்குழாய் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேசிய முகமை ஆய்வு நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மூச்சுக்குழாய் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்கோளாறு கொண்ட மருத்துவப் பயனாளிகள் அதிகரித்து வருவதாக அதன் இயக்குநர் மருத்துவர் தீபா தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூச்சுக் குழாய் நோய், மருத்துவப் பயனாளிகள் 62 பேர் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலை தொடர்கிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக் குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது. 70, 80 வயதுடையவர்களை இந்த நோய் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இணை நோய் போன்ற காரணிகளால் வயதானவர்களுக்கு அதிக இடர்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நோய் மிகவும் தொற்றக்கூடிய வைரஸ். இது லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொடுத்தாலும் நிமோனியா, பிராங்கைடிஸ் போன்ற தீவிரமான நோய்களை உருவாக்கக்கூடியது. தும்மல், இருமல் மூலம் எளிதாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது. மூச்சுக்குழாய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 8 நாட்கள் வரை வைரசை பரப்பலாம். சிலருக்கு 2 வாரங்கள் வரை கூட நீடிக்கலாம். காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், உதடு-சருமம் நீலநிறம், உணவு சாப்பிடும் ஆர்வம் குறைதல், கோபமடைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் பாதிப்பில் இருந்து தவிர்க்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும். மருத்துவப் பயனாளிகளுடன் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.

சென்னையில் காய்ச்சல் காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலானவர்கள் முதலில் இன்ப்புளூயன்சா என நினைக்கிறார்கள். ஆனால் தற்போது மூச்சுக்குழாய் நோய் பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகிறது.

இவ்வாறு டாக்டர்கள் கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *