குரூப் 4: இணையவழியில் பெறப்பட்ட ஜாதி சான்றிதழ் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய தகவல்

சென்னை, நவ. 15- டிஎன்பி எஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு முடிவுகள் வெளியாகி தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

தேர்வர்கள் எதிர்பார்த்தபடியே சொன்ன நேரத்திற்குள் முடிவு வெளியிடப்பட்டு தற்போது பணி நியமனம் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இணையவழியில் பெறப்பட்ட ஜாதி சான்றிதழ் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு

குருப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல தேர்வுகளை நடத்தி வந்தாலும், குரூப் 4 தேர்வு தேர்வுக்கே தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள். அந்த வகையில் தான் நடப்பு ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக் காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. சுமார் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், கூடுதலாக 727 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரித்தது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி சொன்னது போலவே குரூப் 4 முடிவுகள் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியானது. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை மற்றும் வகுப்பு வாரியாக தரவரிசை ஆகிய தகவல்களும் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து, இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

தற்போது சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் சில தேர்வர்களுக்கு இணையவழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழில் ‘Signature Not Verified’ என்று வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது

இதன்படி, இணையவழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழில் ‘Signature Not Verified’ என வந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ‘Signature Not Verified’ என உள்ள வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்த தேர்வர்கள், குறைபாடுடைய சான்றிதழ்களை மீளபதிவேற்றம் செய்ய வழங்கும் காலத்தில், முறையான மின்கையொப்பமிட்ட (digital signature) வகுப்புச் சான்றிதழை பதிவேற்றம் செய்யவில்லையெனில் அவர்களது உரிமைகோரல் (claim) நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *