தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற விழாவில், 2024-25 ஆம் ஆண்டிற்கு அரசு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்தர மோகன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
