தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு

சென்னை, நவ. 15- தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப் பினர்களை நியமித்து அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர் புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின் விரி வான சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களது நலனை பேணும் பொருட்டும், கடந்த 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டது.

உறுப்பினர் செயலர், தமிழ் நாடு மீனவர் நல வாரியம் அவர்களின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்தது. தமிழ் நாடு மீனவர் நல வாரியத்திற்கு கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளபடி அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை இரண்டாண்டு காலத்திற்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது. மேற்படி நியமனம் செய்யப்பட்ட, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு பதவி வகிப்பர்.

தமிழ்நாடு மீனவர் நலவாரியத் தின் தலைவராக குளச்சல், ஜோசப் ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அலுவல் சாரா உறுப்பினர்கள்: தாஜுதீன், போஸ், அந்தோணி ஸ்டாலின், ஜோஸ், செல்வபாரதி, கணேஷ், பன்னீர்செல்வம், முருகன், லெனின், கோ.மனோகரன், ஜெபமாலை பர்னாந்து, ஜேசுராஜா, ஜேசுராஜ் (எ) ராஜா, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் செயலர் என்ற முறையில் நல வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பார். இந்நல வாரியம் முதல் தரமான குழுவாகக் கருதப்படும். அலுவல் சாரா உறுப் பினர்களின் அகவிலைப்படி மற்றும் பயணப்படி போன்றவற்றிற்கு வாரியத்தின் உறுப்பினர் செயலரால் ஒப்பளிக்கப்பட வேண்டும். வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் அரசுப் பதவிகளில் இருந்தால், அவர்கள் நல வாரியத்திலிருந்து ஏனைய பயன்பாடுகளை பெறமுடியாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *