10.5.2023
தி இந்து:
* கருநாடகா தேர்தலில் மே 8 அன்று குல்பர்கா தெற்கு தொகுதியில், சங்கமேஷ் காலனியில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த பாஜகவினரை கலபுர்கி துணை ஆணையர் யஷ் வந்த் குருகர் நள்ளிரவில் திரைப்பட பாணி நடவடிக்கையில் பின்தொடர்ந்து சென்று பிடித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உயர்கல்வியில் முஸ்லிம் சேர்க்கை குறைந்து வருவதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 2019-2020இல் இருந்து 8 சதவீதம் குறைந்துள்ளது – அதாவது 1,79,147 மாணவர்கள். இந்த அளவு முழுமையான சரிவு சமீப காலங்களில் எந்த குழு விற்கும் ஏற்பட்டதில்லை.
– குடந்தை கருணா