பாமா விஜயம், நரகாசுர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்சம் மாற்றி உருவான படம். ‘பாரிஜாதம்’.
முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருக்கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடியவில்லை. எப்படி அடக்குவது என்றும் தெரியவில்லை. அவனுடைய முற்பிறப்பில் நரகாசுரனின் தாயாக இருந்த. இப்போது கிருஷ்ணரின் மனைவிகளில் ஒருவரான பாமாவால் அடக்க முடியும் என்று நினைக்கிறார் நாரதர். அதற்கான வேலைகளில் இறங்கும் அவர், அதைச் செய்து முடிப்பது ஒரு கதை.
மற்றொரு கதையில் அரிய பாரிஜாதப் பூவை ருக்மணிக்குக் கொடுக்குமாறு கிருஷ்ணனிடம் கொடுக்கிறார் நாரதர். இதனால் பாமாவுக்கு கோபம் வருகிறது. கிருஷ்ணன் மீது ருக்மணி கொண்டிருக் கும் பக்தி மற்றும் காதலை பாமாவுக்கு உணர்த்துவது இக்கதை. மூன்றாவது பகுதியில் என்.எஸ்.கிருஷ்ணன். டி.ஏ.மதுரம், புளிமூட்டை ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் காமெடி கதை இடம்பெற்றது.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இணைந்து ‘பாரிஜாதப் பூ’ என்ற பாடலைப் பாடினர். அப்பாடல் அப்போது ரசிக்கப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணன். ‘பாதுகாக்கணும் பாங்கு பார்க்கணும் பழக்கி வைக்கணும்’ என்ற பாடல் அப்போது மிகப் பிரபலமாக இருந்தது. பக்திப் படம் என்றாலும் பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டு என்.எஸ்.கிருஷ்ணன் அமைத் திருந்த நையாண்டி நகைச்சுவைக் காட் சிகள் அப்போது ரசிக்கப்பட்டன. போலி நாரதராக புளிமூட்டை ராமசாமி நடித்தார். ‘பாரிஜாதம்’ பூவுக்குப் பாரியும் சாதமும் என அவர் கொடுக்கும் விளக்கம் குபீர் நகைச்சுவை. ஜித்தன் பானர்ஜி ஒளிப் பதிவு செய்தார். 1950ஆம் ஆண்டு (நவ.9) வெளியான இந்தப் படம், வரவேற்பைப் பெற்றது.
