தயக்கம் ஒரு கைவிலங்கு அதை உடைக்க… இதோ ஒரு வாய்ப்பாடு!

நவீன உலகில், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான மெல்லிய கோடு, செயல்படுவதற்கும் தயங்குவதற்கும் இடையே உள்ள இடைவெளியே ஆகும். நம் அனைவருக்கும் ஒரு நல்ல யோசனை தோன்றும், ஒரு முக்கியமான வேலையைத் தொடங்க உந்துதல் பிறக்கும்; ஆனால், பயம், சந்தேகம், மற்றும் அதிகப்படியான சிந்தனை (Overthinking) காரணமாக அந்த உந்துதல் உடனடியாக மங்கிப்போகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞர் மெல் ராபின்ஸ் (Mel Robbins), உலகை மாற்றியமைத்த ஒரு எளிய உளவியல் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தினார்: “தி 5 வினாடி வாய்ப்பாடு” (The 5 Second Rule). இந்த எளிமையான முறை, உங்களின் உள் உந்துதலை உடனடியாக உடல்ரீதியான செயலாக மாற்ற உதவும் சக்திவாய்ந்த கருவியாகும்.

 வினாடி வாய்ப்பாடின் மய்யக் கருத்து

 வினாடி வாய்ப்பாடின் அடிப்படை தத்துவம் மிகவும் நேரடியானது:

“உங்களுக்கு ஒரு வேலையைத் தொடங்கவோ, ஒரு முக்கிய முடிவை எடுக்கவோ, ஒரு தயக்கமான சூழ்நிலையில் துணிந்து பேசவோ ஒரு எண்ணம் அல்லது உந்துதல் (Impulse) ஏற்பட்டால், அடுத்த 5 வினாடிகளுக்குள் நீங்கள் உடல்ரீதியான செயலை (Physical Action) செய்யத் தொடங்க வேண்டும்.”

சூத்திரம்: 5 – 4 – 3 – 2 – 1 – {செய் (GO)}

பயன்பாடு: தயக்கம் ஏற்படும் போதெல்லாம், உடனடியாகப் பின்னோக்கி எண்ணத் தொடங்குங்கள். நீங்கள் “1”அய் அடைந்த அடுத்த நொடியே, வேறு எந்த யோசனைக்கும் இடம் கொடுக்காமல், நீங்கள் செய்ய நினைத்த வேலையின் முதல் படியை (First Step) எடுத்து வைக்க வேண்டும்.

தயக்கம் மற்றும் மூளையின் செயல்பாடு

இந்த வாய்ப்பாடு ஏன் மிகவும் சக்தி வாய்ந்தது?

  1. மூளையின் சதி: நீங்கள் ஒரு செயலைத் தொடங்க நினைக்கும்போது, முதல் 5 வினாடிகளுக்குள் உங்கள் மூளை உடனடியாக சந்தேகம், பயம், அதிகப்படியான பகுப்பாய்வு (Overanalysis) மற்றும் “இதை அப்புறம் செய்யலாம்” போன்ற காரணங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறது. இந்த சிந்தனைக் காலமே, உந்துதலுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு தடைவிலங்கை (Chain of hesitation) உருவாக்குகிறது.
  2. கவனம் திசை திருப்புதல்: 54321 என்று எண்ணுவதன் மூலம், மூளையின் இந்த எதிர்மறைச் சிந்தனையில் இருந்து கவனம் திசை திருப்பப்படுகிறது (Distraction). இது மூளைக்குச் சாக்குப்போக்குகள் சொல்லக் கிடைக்கும் நேரத்தைத் துண்டிக்கிறது.
  3. செயலுக்கு உந்துதல் (Push): இந்த கவுண்ட்டவுன், எண்ணத்தை உடனடியாகச் செயலாக, மாற்ற, ஒரு உள் உந்துதலை (Internal Push) உருவாக்குகிறது. இது ஒரு ராக்கெட் ஏவுதலுக்கான கவுண்ட்டவுன் போல செயல்பட்டு, உங்களை இலக்கை நோக்கித் தள்ளுகிறது.

அன்றாட வாழ்வில் பயன்பாட்டு உதாரணங்கள்

தயக்கமான சூழ்நிலை  5 வினாடி வாய்ப்பாடு  வெற்றிச் செயல்

அலாரம் அடித்தும் படுக்கையை விட்டு எழ முடியவில்லை.  5  4  3  2  1. செய்!  உடனே படுக்கையை விட்டு வெளியேறுதல்.

முக்கியமான வேலையைத் தொடங்கத் தயக்கம்.  5  4  3  2  1. செய்!  கணினியைத் திறந்து, ஆவணத்தைத் திறப்பது.

ஒரு கூட்டத்தில் யோசனையைப் பேசத் தயக்கம்.  5  4  3  2  1. செய்!  கையை உயர்த்துவது அல்லது பேசத் தொடங்குவது.

உடற்பயிற்சியைத் தவிர்க்க மனம் காரணம் தேடுதல்.  5  4  3  2  1. செய்!  உடற்பயிற்சி ஆடையை அணிவது.

மெல் ராபின்ஸின் பின்னணி
ஒரு வெற்றிப் பாதை

மெல் ராபின்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவமே இந்த வாய்ப்பாட்டின்  வலிமைக்கு ஆதாரம்.

ஆரம்பத்தில் குற்றவியல் வழக்குரைஞராகப் பணியாற்றிய அவர், நீண்ட காலத் தயக்கம் மற்றும் சுயசந்தேகம் காரணமாக நிதி நெருக்கடி மற்றும் தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டார்.

இந்த நெருக்கடியான சூழலில், அவர் தன்னைச் சுயபரிசோதனை செய்தபோது, உந்துதலுக்கும் செயலுக்கும் இடையில் அவர் எடுத்துக்கொண்ட சில வினாடி நேரமே தன் தோல்விக்குக் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்.

இந்த எளிய வாய்ப்பாட்டைத் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியதன் மூலம், அவரது பணிகள் வேகமடைந்ததுடன், அவர் புகழ்பெற்ற வழக்குரைஞராகவும், உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த, ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் மாறினார்.

மெல் ராபின்ஸின் 5 வினாடி வாய்ப்பாடு ஒரு சிக்கலான தத்துவமோ அல்லது நேர மேலாண்மைத் திட்டமோ அல்ல. இது உங்களின் உள் கட்டுப்பாட்டு மய்யத்தை (Locus of Control) மாற்றியமைக்கும் ஒரு உளவியல் சுவிட்ச் (Psychological Switch) ஆகும்.

பின்லாந்து, டென்மார்க், சுவீடன், நார்வே போன்ற அய்ரோப்பிய நாடுகளின் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்தப் ஃபார்முலா கற்பிக்கப்படுவது, இது கல்வி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்த்துகிறது.

தயக்கம் ஒரு சங்கிலி. அந்தச் சங்கிலியை உடைக்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு சிறிய செயல் மட்டுமே: 5 – 4 – 3 – 2 – 1, செய்! இந்த வாய்ப்பாட்டை முயற்சிப்பதன் மூலம், நீங்கள் உடனடியாகச் செயல்படும் ஆற்றலைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், நேர்மறை செயல்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பாடு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *