தீவிர வலதுசாரி ஆதரவாளரும் கேரளாவால் தடை செய்யப்பட்ட மதவெறியை வளர்க்கும் ஊடகம் ஒன்றின் முக்கியமான நபர் அஜித் குமார் ஜா அரியானா தேர்தலில் வாக்களித்தார். அதன் பிறகு டில்லி தேர்தலில் வாக்களித்தார். இப்போது பீகார் தேர்தலிலும் வாக்களிக்கிறார். இவருக்கு பாஜகவின் தேர்தல் ஆணையம் மூன்று அடையாள அட்டையைக் கொடுத்துள்ளது.
இரட்டை வாக்களிப்பு: “இரட்டை ஜனநாயகம் அய்ந்து மிகவும் பிரபலமான பாஜக முகம் டில்லி அரியானா பிறகு பீகாரிலும் வாக்களித்து பெருமை பட வாக்குப் பதிவு செய்த விவரத்தையும் வெளியிட்டுள்ளார்கள்
ராகேஷ் சின்ஹா டில்லி & பீகார்
சந்தோஷ் ஓஜா டில்லி & பீகார்
நாகேந்திர பாண்டே டில்லி & பீகார்
மனோஜ் மிஸ்ரா டில்லி & பீகார்
அஜித்குமார் ஜா அரியானா, டில்லி & பீகார்
இந்த ஆதாரங்கள் வெளிவந்த பின்னரும், தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறது. இதன் காரணமாக, “பீகார் எஸ்அய்ஆர் பயிற்சி வெற்றி பெற்றது” என்று முன்னர் கூறப்பட்டதற்கு இதுதான் அர்த்தமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், “ஒரு கட்சிக்கு மட்டுமே இரண்டு அல்லது மூன்று முறை வாக்களிக்க உரிமையா?” என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
