புத்தகக் கண்காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த நாத்திகர் ஒருவர் கூறிய கருத்துகள் மிக மிக அருமையானவை. பெரியாரும் கருத்துகளை புத்தகங்களை படித்து அதை உள்வாங்கி நன்றாக வெளிப்படுத்தி பேசி இருக்கிறார். நான் நாத்திகனாக இருந்தாலும் பெரியாரின் சொல்லாற்றல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ரொம்ப நாளாக பார்ப்பனர்கள் இடைச்செருகலாக சமஸ்கிருதத்தில் உள்ள புருஷ சுத்த பாடல் வரிகளுக்கு விளக்கம் தேடிக் கொண்டிருந்தேன். பெரியாருடைய உரைகள் புத்தகங்கள் அதனுடைய விளக்கங்கள் பற்றி தெரிந்து கொண்டவுடன்தான் மிகவும் அதிர்ச்சியானேன். பிரம்மனின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன், என்று மனிதர்களுக்கு உள்ளேயே பிரிவினை ஏற்படுத்துகின்ற வகையில் எழுதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானேன். எல்லோரையும் சமமாக படைத்த கடவுள் இப்படி எப்படி ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் பிரித்து வைப்பான்.!? இந்த ஆரிய மாயை ஆட்சியில் மீண்டும் அடிமைப்படுத்த ஜாதி சமயம் சாயம் பூசி திராவிடத் தமிழர்களை நினைக்கிறார்கள். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள பெரியாரின் புத்தகங்களில் மனிதனை படியுங்கள், மனிதாபிமானத்தை படியுங்கள், சமூக நீதியை படியுங்கள் என்று பேசியது Periyar Vision OTT–இல் முழுமையாக உள்ளது. பாருங்கள்
– U. சிவகுருநாதன்

அசோக் நகர், சென்னை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

