தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்,
பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் தவறான கருத்துகளை திரும்ப திரும்பச் சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். பாஜக ராட்சத பலத்துடன் உள்ளது, நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில் ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார். ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவை அரவணைத்து செல்லலாம். ஆனால், அதை தவிர்த்து ராகுலுக்கு துணையாக நிற்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் திருத்தப் பணிக்கு
எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது ஏன்?
கே.பாலகிருஷ்ணன் கேள்வி
மார்க்சிஸ்ட் கம்யூ. மேனாள் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,
அவருடைய ஓட்டு பறிக்கப் படும்போது, திருத்தப்பணியின் ஆபத்தை உணருவார். தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக செயல்படுவதன் வாயிலாக, தேர்தல் ஆணையத்தை தன்வசப் படுத்தி, இரட்டை இலை தாவாவில் தனக்கு ஆதர வான உத்தரவை பெறலாம் என நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
