சென்னை, நவ.14- சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருநங்கையர் உரிமைக்கான சமூக செயல்பாட்டாளர் சாஷா அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாலினம் மற்றும் பெயர் மாற்றத்திற்குப் பிறகு எங்களில் பலரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையிலுள்ள ஒளிப்படங்களில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவை ஒத்துப் போகாததால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (எஸ்.அய்.ஆர்.) போது எங்களது பெயர் நீக்கப் பட வாய்ப்புள்ளது.
குடும்பத்தினரின் நிராகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக திருநங் கைகள் அடிக்கடி முகவரி மாறுகின்றனர். இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது இப்படி எங்கள் வாக்குரிமைகள் மறுக்கப்பட்டால், எங்கள் குரல் கேட்காமல் போய்விடும். எஸ்.அய்.ஆர். பணிக்கான குழுவில் திருநங்கைகளையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருநங்கைகள் மனு
Leave a Comment
