சென்னை, நவ.14 பள்ளிகளில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். டெட் தேர்வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆக.11-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு டெட் தேர்வு நாளை (நவ.15) தொடங்குகிறது.
முதல் நாளில் டெட் தாள்-1 தேர்வும், 2-ஆவது நாளான 16.11.2025 தாள்-2-ஆம் நடைபெற உள்ளன. தாள்-1 தேர்வில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர், தாள்-2-இல் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 808 பேர் கலந்து கொள்கின்றனர். தாள்-1-க்கு 367 தேர்வு மய்யங்களும், தாள்-2-க்கு 1,241 தேர்வு மய்யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் நிலைய உணவகங்களில்
குறைகளை பற்றி புகார்களை தெரிவிக்க புதிய ஏற்பாடு
சென்னை, நவ.14 ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலைய உணவகங்களில் குறைகளைப் பதிவதற்காக க்யூஆா்கோடு பதிவு வசதி 12.11.2025 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ரயில்வே கோட்டத்தில் அனைத்து உணவகங் களிலும் குறைகளைப் பதிவு செய்யும் வகையில் முதன்முறையாக க்யூஆா் கோடு வசதி செய்துதரப்பட்டுள்ளது. ‘ரயில் மதத்’ செயலியுடன் இணைந்து இந்தப் புகாா் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
உணவகங்களில் அதிகக் கட்டணம், சேவைக் குறைபாடு, உணவின் தரம், அளவு, உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காதது, சுகாதார நிலை குறித்த விவரங்களை இதில் பதிவிடலாம். உணவக க்யூஆா் கோடை பயணிகள் கைப்பேசியில் ஸ்கேன் செய்யலாம். அதில் உணவக இருப்பிடம், நிலையக் குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். அத்துடன் இந்திய ரயில்வேயின் அதிகார குறை தீா்ப்பு செயலியான ரயில் மதத் வசதிக்குள் தானாகவே உள்நுழையலாம்.
அதில் தங்களது கைப்பேசி எண்ணைக் குறிப்பிட்டு கடவுச் சொல் (ஓடிபி) வந்ததும் புகாா்களைத் தெரிவு செய்து சுருக்கமாக விளக்கிடலாம். அத்துடன் குறிப்பு எண்ணுடன் புகாருக்கான ஒப்புகைச் சீட்டும் ரயில் செயலியில் அனுப்பிவைக்கப்படும். இந்தத் தகவல்கள் உணவக ஆய் வாளா்கள், ரயில் நிலைய மேலாளா்கள் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
