டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் தொடர்ச்சியாக ஆணையத்தின் பணியைத் தொடங்கினார் நீதிபதி பாஷா. மூன்று மாதங்களில் ஆணையம் அறிக்கை அளித்திட வேண்டும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு: நாடாளுமன்ற கூட்டத்தை முன்னதாக கூட்ட வேண்டும்; அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எடியூரப்பா மீது போக்சோ வழக்கு: கருநாடக மேனாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவரு மான பி.எஸ். எடியூரப்பாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், பிப்ரவரி 2, 2024 அன்று அவரது வீட்டில் நடந்த சந்திப்பின் போது மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய கருநாடக உயர் நீதிமன்றம் மறுப்பு.
* அமெரிக்காவில் தனது நலன்களை பேணுவதற்காக ஆர்.எஸ்.எஸ் “பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பரப்புரை நிறுவனத்தை” ஈடுபடுத்தியுள்ளது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு. மேலும் சங்கம் “தேசிய நலனைக் காட்டிக் கொடுத்தது” இது முதல் முறை அல்ல என்றும் தனது பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
தி இந்து:
* பண்டைய ஜாதி அடிப்படையிலான படிநிலைகளை தார்மீக முன்னுதாரணங்களாகக் கொண்டு, செயல்படுத்தப்படாத தொழிலாளர் குறியீடுகளை ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையாக மறுபெயரிடுவதன் மூலம், நீதி, நியாயமான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தொழிலாளர்களின் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான போராட்டங்களை ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைவுக் கொள்கை பின்னோக்கித் திருப்பத் திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் கண்டனம்.
– குடந்தை கருணா
