கும்பகோணம், நவ. 14- 12.11.2025 புதன்கிழமை மாலை 05:30 மணியளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலை மையேற்று கருத்துரையாற்றினார்.
மாநகரத் தலைவர் க.சிவக்குமார், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
வழக்குரைஞர் பீ. இரமேஷ், கடவுள் மறுப்பு கூறினார்
மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செய லாளர் சு. துரைராசு, பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி,ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, தொடக்க உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செய லாளர் க.சேதுராமன், மாவட்டத் துணைத் தலைவர் வ. அழகுவேல், மாவட்டத் துணைச் செயலாளர் து.சரவணன், மாவட்ட மகளிரணித் தலைவர் எம்.திரிபுரசுந்தரி, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி, கும்பகோணம் ஒன்றியத் தலைவர் கோவி.மகாலிங்கம், வலங்கை ஒன்றியத் தலைவர் பவானி சங்கர், வலங்கை ஒன்றியச் செயலாளர் சி.இராமச்சந்திரன், திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் கு.முருகேசன், ஒன்றியத் துணைத் தலைவர் நா.முருகானந்தம், தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அ.சங்கர், மாநகர மகளிர் அணிச் செயலாளர் மு.அம்பிகா, குடந்தை செல்வரவன், தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை, குடந்தை குமார், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
மகளிரணி செ.கனிமொழி, நாச்சியார் கோவில் வே.குணசேகரன், பே.இராதாகிருஷ்ணன், எஸ். அய்யப்பன், எஸ்.இராமலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்
திருவிடைமருதூர் ஒன்றிய கழகத் தலைவர் எம்.என்.கணேசன் தனது குடும்பத்தினர் சார்பாக ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கி வசூல் பணியை துவங்கி வைத்து சிறப்பித்தார்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.ரியாஸ் அகமது, நன்றி கூறினார்.
ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர்கள். திருநாகேஸ்வரம் அ.மொட்டையன், படைத்தலை வன்குடி தற்கொலை கோவிந்த ராசு, அய்யம்பேட்டை த.செல்வமணி, பாபநாசம் இராஜம், ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தையும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை யும் தெரிவிக்கிறது.
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு கும்பகோணம் மாவட்ட சார்பில் நிதி திரட்டி டிசம்பர்-08 அன்று மாலை குடந்தையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை குடந்தையில் டிசம்பர்-08 அன்று மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும். கும்பகோணம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர், அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர்-02இல். 93ஆவது பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் குடும்பத் தலைவர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களை சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துவது எனவும். கும்பகோணம் மாவட்ட கழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
