ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டும் என்றால் பெரியார் அதற்கு நிச்சயம் தேவை. தந்தை பெரியார் சிலையாக நிற்கவில்லை நம் கருத்துகளாக நிற்கிறார். பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்களின் கருத்துகளை எடுத்துக் கொண்டு நாம் களம் காண வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஜாதி, மதங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரியார் தேவைப்படுகிறார். சிலையாக நிற்கும் அவரையே இன்றும் உதைக்கிறாங்க, உடைக்கிறாங்க, காவிச் சாயம் பூசுறாங்க என்றால் பெரியாரின் கருத்துகள் எந்த அளவுக்கு இருந்திருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதமாற்றம் செய்கிறார்கள் என்று இந்து அமைப்புகள் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் இந்த புத்தக அரங்கிலேயே சங்பரிவார் அமைப்புகள் பகவத் கீதையை கூவி கூவி விற்கிறார்கள். மாணவி ஒருவர் இறந்துவிட்டதை கிறிஸ்துவ கட்டாய மதமாற்றத்தினால் நடந்தது போல பரப்பினார்கள். அப்படி என்றால் இவர்கள் செய்வது என்ன? என்று பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் பேசிய கருத்துகள் பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்? என்று தலைப்பிடப்பட்டு Periyar Vision OTT–இல் பதிவாக வெளிவந்துள்ளது. இன்றே காணுங்கள்.
– கே.சேதுராமன்
சிவகங்கை

த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

