சும்மா, கதை அளக்க வேண்டாம்
தீபாவளி பற்றி வண்ண வண்ண மாக கதை அளக்கிறார்கள் உலகில் தீய சக்தியாக விளங்கிய கொடிய வன் நரகாசுரன் அவன் மக்களுக்கு பல வித கொடுமைகளை செய்து வந்தான். இதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா அவனை அழித்து ஒழிக் கிறான். உயிர் போகும் தருவாயில் இருந்த நரகாசுரன் பரமார்த்தனிடம் ஒரு வரம் கேட்கிறான்.
“நான் பல கொடுமைகள் செய்து மக்களுக்கு எண்ணற்ற துன்பங் களை விளைவித்தேன். நான் இறந்த பிறகாவது இந்நாளை மக்கள் அனைவரும் என்றென்றும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண் டும்” என்ற வரத்தினை கேட்க கிருஷ்ண பரமாத்மாவும் அந்த வரத்தை அளித்தார்.
நரகாசுரன் இறந்த நாளை தான் நாம் அனைவரும் தீபாவளிப் பண் டிகை என்று கொண்டாடுகிறோம் என்று பார்ப்பன ஏடுகள் கரடி விடுகின்றன. நரகாசுரன் யார், அவன் எந்த ஆண்டில் பிறந்தான், அவன் என்ன கொடுமைகளை செய்தான்? என்பதை பற்றி யாரா வது மூச்சு விடுகிறார்களா புராணக் கதை அளப்புகளை வரலாறாக திரித்து மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது தான் இவர்களின் வேலை.
வரலாற்றில் அசுரன் என்று சொல்லப்படுவோர் எல்லாம் திராவிடர்கள் என்றும் சுரன் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்றும் கூறப்படுகிறது. பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே இதனை ஒப்புக் கொண்டு எழுதி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆரிய திராவிடப் போராட்டத்தில் அசுரன் என்று சொல்லப்படும் நர காசுரனை கொன்றது ஆரியம். தங் கள் இனத்தவன் ஆன நரகாசுரனை கொன்ற நாளை திராவிடர்கள் கொண்டாடுவது எவ்வளவு இழுக்கு.
பக்தியின் பெயரால் மக்கள் பகுத்தறிவை இழப்பதால் இவற்றை யெல்லாம் நம்பி தொலைக்கிறார்கள் பூமியை பாயாக சுருட்டிக் கொண்டு இரணியாட்சதன் கடலில் விழுந் தான் என்பதும், பூமியை மீட்க மகாவிஷ்ணு வராக அவதாரம் அதாவது பன்றி அவதாரம் எடுத்து பூமியை மீட்டான் என்பதும், பூமிக் கும் பன்றிக்கும் ஒரு மகன் பிறந் தான் என்றும், அவன் தான் நரகா சுரன் என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான ஆபாசமான மூடநம் பிக்கை! தீபாவளி கொண்டாடுபவர் சிந்திப்பீர்!!
இதுபோன்ற கேவலமான மூடத் தனங்களை அச்சிட்டு பரப்பி மக்க ளின் பணத்தை சுரண்டும் பிழைப் பும் ஒரு பிழைப்பா? புராண கட்டுக் கதைகளை வரலாறாக திரிக்க வேண்டாம் திரி நூல்களே!