மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

2 Min Read

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆண்டிபட்டி, நவ.13- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 67.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 1810 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக 2609 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதனால் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணையின் நீர் இருப்பு 5299 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது. வரத்து 1184 கன அடி. திறப்பு 1723 கன அடி. நீர் இருப்பு 5680 மி.கன அடியாக உள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காற்று மாசு

டில்லியில் பள்ளிகளுக்கு ‘ஆன்லைன்’ வகுப்பு

புதுடில்லி, நவ.13- புதுடில்லியில் சராசரி காற்றின் தரக்  குறியீடு 362இலிருந்து  நேற்று முன்தினம் (11.11.2025) காலை 425 ஆக கடுமை யாக உயர்ந்ததை அடுத்து, அம்மாநிலத் தில் உள்ள பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை கலப்பின முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில ‘கல்வி  இயக்குநரகம்’ வெளியிட்ட உத்தரவில், “அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் உள்பட அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைக் கலப்பின முறையில் பாடங்களை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

கலப்பின (நேரடி மற்றும் ஆன்  லைன்) முறையில் சாத்தியமான இடங்களில் இணைய வழியிலும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம். அதாவது சூழ்  நிலைக்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படும்.  இது உடனடியாக நடைமுறைக்கு வரும்  என்றும் அறிவுறுத்தல் வெளியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *