கலிகி கல்விக் குழுமத் தலைவர், கணித மேதை ஆர்.ஜனார்த்தனன் நேற்று (12.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
பெரம்பூர் இராவ்பகதூர் கலவல கண்ணன் (செட்டி) பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர் – கல்வி நிறுவனங்கள் பலவற்றைத் தொடங்கி – பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து பெரும் கல்விக் குழுமமாக உருவாக்கியவர்.
திராவிட இயக்கத்தின்பால் பற்றுக்கொண்டவர். இயக்கக் கூட்டங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உதவிகள் புரிந்தவர்.
பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை, வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், ‘பாசறை முரசு’ இதழின் ஆசிரியர் மு.பாலன், செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், கொளத்தூர் கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன், யாழ் நிழற்பட நிலையம் அ.சிவானந்தம் மற்றும் கழகத் தோழர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எராளமான பொதுமக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
