இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “இந்தியக் குடிமக்களை – படித்தவர்களைக் கூட – பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்ன என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்” செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மேனாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘பாஜக, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக வாக்குகளை திருடுகின்றன’: மில்லியன் கணக்கான பாஜக உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வெளிப்படையாகச் சுற்றித் திரிந்து வாக்களிக்கிறார்கள், ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு.
* கறைபடிந்த அமைச்சர்களை நீக்குவதற்கான மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றம் 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்தது, காங்கிரஸ் அதை கேலிக்கூத்து என விமர்சனம்.
* கூட்டுக்குழு 31 உறுப்பினர்களில் பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் 21 பேர், பாஜகவின் பி டீம் பத்து பேர் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்.
* செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக அமித்ஷா பதவி விலக செய்ய வேண்டும், காங்கிரஸ் கட்சி கோரிக்கை.
– குடந்தை கருணா
