புதுக்கோட்டை, நவ. 13- பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம், இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி தொடர்பரப்புரைகூட்டம், தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்தநாள் விழா – குருதிக்கொடை, விடுதலை சந்தா வழங்கல் என சிறப்பாக நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.
7.11.2025 அன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கழக கலந்துறையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையில், மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் முன்னிலையில் எழுச்சியோடு நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் பரப்புரைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் பற்றியும், பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
நவம்பர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாநகரில் இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி தொடர் பரப்புரைக் கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது எனவும்,
கூட்டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது எனவும், பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்குவதுஎனவும் முடிவு செய்யப்பட்டது.
93ஆவது அகவையில் தடம்பதிக் கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது பிறந்தநாள் மகிழ்வாக மாவட்ட துணைத் தலைவர் சு.கண் ணன் தலைமையில் குருதிக்கொடை, விடுதலைக்கு சந்தாக்கள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் காப்பாளர் ஆ.சுப்பையா, பொதுக் குழு உறுப்பினர்கள் சே.இராசேந்திரன், மூ.சேகர், மாவட்ட துணைத்தலைவர் சு.கண்ணன், மாநகரத்தலைவர்.செ.அ.தர்மசேகர், திருமயம் ஒன்றிய தலைவர் அ.தமிழரசன், விராலிமலை ஒன்றியத்தலைவர் சி.குழந்தைவேலு, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், ம.மு.கண்ணன் உள்ளிட்டடோர் கருத்துரை வழங்கினார்கள்.
பெரியார் உலகத்திற்கு நிதித் திரட்டல் குழு அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள்- ஆ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர், ம.மு.கண்ணன்
தலைவர்-பேரா.மு.அறிவொளி மாவட்டத் தலைவர், செயலாளர்-செ.அ.தர்மசேகர் மாநகரத் தலைவர், பொருளாளர்- ப.வீரப்பன் மாவட்டச் செயலாளர், துணைத் தலைவர்கள்:அ.சரவணன் மாநில ப.க.அமைப்பாளர், இரா.மலர்வண்ணன் மாவட்டம்.ப.க.தலைவர்
துணைச்செயலாளர்கள்- மூ.சேகர் பொதுக்குழு உறுப்பினர், சி.குழந்தைவேல் ஒன்றியத்தலைவர் விராலிமலை
உறுப்பினர்கள்: செ.இராசேந்தின் பொதுக்குழு உறுப்பினர், சு.கண்ணன் மாவட்டத்துணைத்தலைவர், அ தமிழரசன் திருமயம் ஒன்றியத் தலைவர், ரெ.மு. தர்மராசு மாவட்ட துணைச் செயலாளர் ,ஆசைத்தம்பி மாவட்டதணைச்செயலாளர், பூ.சி .இளங்கோ மாநகரசெயலாளர், அ.சித்திரவேல் ஒன்றிய தலைவர் கந்தர்வக் கோட்டை, சாமி.இளங்கோ புதுக்கோட்டை ஒன்றியத்தலைவர், பு.ஆம்ஸ்ட்ராங் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர், சித.ஆறுமுகம் பொன்னமராவதி ஒன்றிய தலைவர், ஆறுமுகம் பொன்னமராவதி ஒன்றிய துணைத்தலைவர், வீ.மாவளி பொன்னமராவதி ஒன்றிய செயலாளர், பி.சேகர் நகர அமைப்பாளர் இரா.வெள்ளைச்சாமி மாவட்டம்.ப.க .செயலாளர், தி.குணசேகரன் ப.க.கந்தர்வகோட்டை, வே.சூரிய மூர்த்தி ப.க., சு.பத்மநாபன், கார்ல் மார்க்ஸ் மாவட்ட.இளைஞரணி கழகத் தலைவர்.
