அரியலூர், நவ. 13- அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரை யாடல் கூட்டம் 8.11.2025 அன்று மாலை 5.30 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது .
கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலை மையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் வரவேற்புரையாற்றினார். செந்துறை ஒன்றியச் செயலாளர் ராசா செல்வக்குமார் கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்ட காப்பாளர் சி.காமராஜ், மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின. ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் க.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ப.க.அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் கூட்டத் தின் நோக்கம் குறித்து உரை யாற்றினார்கள்.
சிறப்புரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் லால்குடியில் நடைபெற உள்ள ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்தும், தமிழர் தலைவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் ,பெரியார் உலகத்திற்கு நிதியினை திரட்டுவது குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். திருமானூர் ஒன்றியச் செயலாளர் பெ.கோபிநாதன் நன்றி கூறினார் .
தீர்மானங்கள்
கழகமுன்னோடி நிண்ணியூர் சா.ராஜேந்திரன், வழக்குரைஞர் சா.பகுத்தறிவாளன் ஆகியோருடைய தாயாரின் மறைவிற்கும், தா.பழூர் ஒன்றிய மேனாள் செயலாளர் கோரைக்குழி ஆசைத்தம்பி மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழகத் தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவு செய்யப் பட்டது.
ஜாதி ஒழிப்பிற்காக அரசியல மைப்புச் சட்டத்தை எரித்த போராட்டத்தின் 69ஆவது நினைவு வீரவணக்க நாள் மாநாடு இலால்குடியில் நவம்பர் 26 அன்று (26.11.2025)காலையில் ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கம், மாலையில் ஜாதி ஒழிப்புப் பேரணி, கீழவாளாடியில் திறந்த வெளி மாநாடு என மிகுந்த எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் குடும்பம் குடும்ப மாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென என முடிவு செய்யப்படுகிறது.
ஜாதி ஆணவப் படுகொலை தடுப்புக்கு ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி- சிறுகனூரில் அமையவிருக்கும் “பெரியார் உலகத்திற்கு” அரியலூர் மாவட்ட கழக சார்பில் இரண்டாவது கட்ட மாக நிதி திரட்டி டிசம்பர் – 2அன்று நடைபெறும் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில்…
மாவட்ட விவசாய அணி தலைவர் மா .சங்கர், தொழிலாளரணித் தலைவர் வெஇளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ. தமிழரசன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் தியாக. முருகன் ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.செந்தில் அரியலூர் ஒன்றியத் தலைவர் சி சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில், நகர செயலாளர் ஆட்டோ தர்மா, நெய்வேலி பாவேந்தர் விரும்பி ,செந்துறை ஒன்றியப் பொறுப்பாளர்கள் குழுமூர் சுப்பராயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
