திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி “முத்தமிழறிஞர் பதிப்பகம்” வெளியிட்டுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தினைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.11.2025) பெரியார் திடலில் நேரில் சந்தித்து வழங்கினார். தி.மு.க. இளைஞரணியின் தொடர் செயல்பாடுகளையும், அறிவுத் திருவிழா உள்ளிட்ட முன்னெடுப்புகளையும் பாராட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளார்
(சென்னை, பெரியார் திடல்)
