சென்னை, மே 11 – அனல் மின் உற்பத்தி நிலையங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஒடிசாவில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தற்போது 4,320 மெகாவாட் திற னில் அனல் மின் உற்பத்தி நிலை யங்கள் உள்ளன. இவற்றுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறுவது மட்டுமின்றி, வெளிநாடு களிலிருந்தும் இறக்குமதி செய்யப் படுகிறது.
இந்த நிலையில், ஒடிசா மாநி லத்தில் உள்ள கன்கிலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரி கொள் முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்வாரியம் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை தினமும் அதிகரித்து வருகிறது. வரும் 2026_-2027-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தினசரி மின்தேவை 27,000 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
இந்தத் தேவையைச் சமாளிக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக் கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. மின்வாரியத்துக்கு வட சென்னை, எண்ணூர், எண்ணூர் விரிவாக்கம் ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன.
இவற்றில் மின் உற்பத்தி செய்ய ஆண்டுக்கு 2.23 கோடி டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மகா நதி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 1.95 கோடி டன்னும், சிங்கரேனி சுரங்கத்தில் இருந்து 40 லட்சம் டன் நிலக்கரியும் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், இந்தோனேசியாவில் இருந்து 6 சதவீதம் நிலக்கரி இறக்கு மதி செய்யப்படுகிறது. இவை தவிர, ஒடிசாவில் உள்ள தால்சர், அய்பி வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்தும் நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க மின் உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக நிலக்கரியை கொள்முதல் செய்யவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஒடிசாவில் உள்ள 500 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட கன்கிலி நிலக்கரி சுரங் கத்தில் இருந்து நிலக்கரி கொள் முதல் செய்ய முடிவு செய்து இதற்குத் தேவையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் பங் கேற்க மின்வாரியம் முடிவு செய் துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த ஒப்பந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கும் என்றனர்.