விருத்தாசலம், நவ.12– விருத்தாசலம் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.ஜி வளாகத்தில் 9.11.2025 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், காப்பாளர் அ.இளங்கோவன், கழக சொற்பொழிவாளர் புலவர் வை.இளவரசன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.ராசமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று உரையாற்றினார். அப்போது, பெரியார் உலகத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
நவம்பர் 26 ஆம் நாள் இலால்குடி மாவட்டம் கீழவாளாடியில் நடைபெறும் ஜாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் மாநாட்டில் விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் தனி ஊர்தியில் பங்கேற்பது.
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடுவது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கனவுத் திட்டமான பெரியார் உலகத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் இரண்டாம் தவணையாக ரூ.10 லட்சம் நிதி வழங்குவது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி – மாணவர் கழக சார்பில் மாவட்டம் முழுவதும் இரு சக்கர பரப்புரைப் பயணம் மேற்கொள்வது என தீர்மானிக் கப்பட்டது.
நிகழ்ச்சியில், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், பெண்ணாடம் நகர தலைவர் செ.கா. இராஜேந்திரன், நல்லூர் ஒன்றியத் தலைவர் ந.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன், ஒன்றியச் செயலாளர் கா.குமரேசன், தி.இராஜசேகர், ஆவட்டி முருகேசன், கோ.சிறீதர், கங்கை அமரன், சபரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக கா.அறிவழகன் நன்றி கூறினார்.
