வடசேரி,மே11- உரத்தநாடு ஒன்றி யம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது.
9.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைக் கம் போராட்ட விளக்க பொதுக் கூட் டம் சிறப்பாக நடை பெற்றது. வடசேரி கிளை கழகத் தலைவர் த. இராமசாமி அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் முத்து இராஜேந்திரன் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாவட்ட இணை செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி, ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல் பரமசிவம், வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் சோம.நந்தகுமார் ஆகியோர் முன் னிலையேற்று உரையாற்றினார் கள்.
வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழாவின் சிறப்புகளை எடுத்துரைத்து மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே. மெ. மதிவதனி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் மக் கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் தெற்கு பகுதி செயலாளர் பேராசிரியர் முக்கரை க. சுடர்வேந்தன் Ôமந்தி ரமா, தந்திரமா?Õ என்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
தஞ்சை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அ.உத்திரா பதி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர்
நா.ராமகிருஷ்ணன், தஞ்சை மண்டல மகளிர் அணி செயலாளர் கலைச் செல்வி அமர்சிங், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வடசேரி இ.அல்லிராணி, ஒரத்தநாடு ஒன் றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், முக்கரை செல்வராஜ், வடசேரி கிளைக் கழகப் பொறுப் பாளர் ந. குப்புசாமி, வடசேரி மே. இளங்கோவன், வடசேரி என்.பி.சர வணன், வடசேரி பகுத்தறிவா ளர்கள் கழக பொறுப்பாளர் சா.ஆறுமுகம், வடசேரி திரிபுர சுந்தரி, அல்லிராணி, மதுக்கூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் உ.சுமித்ரா, மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் இன்பக்கடல், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், கழக பேச்சாளர் சிங்காரவேல், மன்னார்குடி சிவா.வணங்காமுடி, பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா காம ராஜ், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் திருமேனி, மதுக்கூர் ஒன்றிய பொறுப்பா ளர்கள் சிவாஜி, முத்து, துரைராஜ், அண்ணாதுரை, ஒரத்தநாடு ஒன் றிய துணைச் செயலாளர் தெலுங் கன்குடிக்காடு நா.பிரபு, நல்லிக் கோட்டை நல்லதம்பி,, தஞ்சை மாவட்ட இளைஞர் அணி தலைவர் கருவிழிகாடு ரெ.சுப்பிர மணியன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, கருவாக்குறிச்சி கோபால், வன்னிப் பட்டு செந்தில்குமார், சமயன்குடிகாடு க.அறிவரசு உள் ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வடசேரி கிளைக் கழக செயலாளர் அ.சந்திரசேகரன் அனைவருக்கும் நன்றி கூறிட நிகழ்ச்சி நிறைவு பெற்றது.