ஆவடி, நவ. 12– ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகை யில் 09-11-2025 அன்று மாலை 5-30 மணிக்கு ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் வி.சோபன்பாபு கடவுள் மறுப்பு கூற தலைமை உரையுடன் கலந்து ரையாடல் கூட்டத்திற்கான நோக்கவுரையையும் மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் ஆற்றினார். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

.முதலாவதாக அண்மையில் மறைந்த மேனாள் சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி மற்றும் அவரது வாழ்விணையர் ஆதிலட்சுமி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அமைதி காக்கப்பட்டது. தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஆவடி மாவட்ட கழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பெரியார் உலகத்திற்கான ரூபாய் பத்து லட்சம் நன்கொடையை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணி, பகுதி கழக தோழர்களின் ஒத்துழைப்போடு வசூல் செய்து வழங்குவது. மேலும் ஆவடி மாவட்டத்திற்கு “இதுதான் ஆர்.எஸ்.எஸ்- பாஜக ஆட்சி – இதுதான் திராவிடம்- திராவிட மாடல் ஆட்சி” என்ற தலைப்பில் பரப்புரை செய்ய ஆவடி பொதுக்கூட்ட த்திற்கு 22-12-2025 அன்று வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்காக வசூல் செய்த நன்கொடையை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கான நன்கொடைக்கு மக்களிடம் அணுக வேண்டிய முறை குறித்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் ஆகியோர் வழிகாட்டலுரையாற்றினர். பின்னர் ஆவடி மாவட்ட கழக துணைத்தலைவர் மு.ரகுபதி, துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன்,துணைத்தலைவர் எஸ்.ஜெயராமன்,தங்க.சர வணன், ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், துணைச் செயலாளர் சென்னகிருட்டிணன், பெரியார் பெருந்தொண்டர்கள் அம்பத்தூர் அ.வெ.நடராசன்,துரை முத்துக்கிருட்டிணன்,கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, அயப்பாக்கம் அரிகிருட்டிணன்,ஆவடி மாவட்ட கழக தோழர்கள் சுந்தர்ராஜன், புருசோத்தமன், நடராஜ், வை.கலையரசன், கு.சங்கர், பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஆகியோர் பெரியார் உலகத்திற்கான தங்களது பங்களிப்பு மற்றும் வசூல் செய்து தரும் தொகையை அறிவித்தனர்.
அக்டோபர், நவம்பர் மாதத்தில் பிறந்த நாள் திருமண நாள் காணும் தோழர்கள் வி.பன்னீர்செல்வம், இரா.வேல்முருகன், விமலா, புருசோத்தமன் ஆகியோருக்கு மாவட்ட கழகம் சார்பாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக திருநின்றவூர் நகர கழக இளைஞரணி அமைப்பாளர் ம.சிலம்பரசன் நன்றி கூறினார்.
