பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும்

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டி

போட்டிக்கான கருப்பொருள்கள்:

சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவை

பங்கேற்க விதிமுறைகள்:-

1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.

2. அதிகபட்ச கால அளவு 30 நிமிடங்கள்

3. மேற்கண்ட கருப்பொருள்கள் தொடர்புடையதாக மட்டுமே இருத்தல் வேண்டும் .

4. ஏற்கனவே திரையிடப்பட்ட, வெளியிடப்பட்ட குறும்படங்களுக்கும் அனுமதி உண்டு

5. பிற மொழியில் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் எனில் தமிழில் உரையாடல்கள் தேவை.

6. குறும்படங்களை email drive இல் Upload  செய்து, அதன் இணைப்பை மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

e mail முகவரி: [email protected]

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 25.11.2023

பரிசுகள்:-

முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ. 5000 இரண்டாம் பரிசு ரூ. 3000 மூன்றாம் பரிசு ரூ. 2000

மேலும் சிறந்த பத்து குறும்படங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.

துறை சார்ந்த தனி விருதுகளும் உண்டு.

தொடர்பு எண்கள்: 

இயக்குனர்: மாரி கருணாநிதி-9787632684

இரா. தமிழ்ச்செல்வன்-9677011415

ச. பிரின்சு என்னாரெசு பெரியார்-9444210 999

உடுமலை வடிவேல்-9940489230

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *