ஒசூர், நவ. 12– இரயாக் கோட்டை சாலை பட்டாளம்மன் நகரில், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி இல்லத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
டிசம்பர் 31 ஒசூர் மாநகரில் நடைபெறவுள்ள இதுதான் ஆர்.எஸ்.எஸ்,பிஜேபி- “இதுதான் திராவிட மாடல்” பொதுகூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து.ஒசூர் கழக குடும்பங்கள் சார்பிலும், பெரியார் ஆதரவாளர்கள், பொதுமக்கள் சார்பில் ரூ.10,00000 பெரியார் உலகத்திற்கு நிதி அளிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
டிசம்பர் 2இல் ஆசிரியர் பிறந்தநாளை முன்னிட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்படும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந் நிகழ்ச்சியில் பொதுக் குழுஉறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, துணைச் செயலாளர் ச.எழிலன், மாவட்ட மகளிரணி செயலாளர் அ.கிருபா, திராவிட மாணவர் கழகம் வாசு,விசு,மாநகர இளைஞரணி சுரேஷ்,ஹரிஸ்,தோழர் சிவாஜி,இளைய நிலா இசைக்குழு இயக்குநர் தில்லை குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இளையநிலா இசைக்குழுவின் மூலம் முப்பது ஆண்டுகளாக இசைப் பணியில் பயணித்து 31 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதன் இயக்குநர் தில்லை குமார் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் பொதுகு்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் சால்வை போர்த்தி பெரியார் நூல் வழங்கினார்.
கழக குடும்பத்தினர் அனைவருக்கும் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி உண்டியல் வழங்கப்பட்டது. இந்த உண்டியல் நிதி பெரியார் உலகம் பெரியார் பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
