தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ‘துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்’ என்ற தலைப்பில் கூறிய கருத்துகளை – சம்பவங்களை கேட்டு ஆச்சரியமடைந்தேன்
1932இல் தந்தை பெரியார் சோவியத் ரஷ்யா பயணம் செல்வதற்கு முன்பே கம்யூனிஸ்ட் Manifesto -வை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். சோவியத் ரஷ்யாவில் நீண்ட காலம் பயணித்து திரும்பி வந்த நிலையில் அன்றைய ஆங்கில அரசு பெரியாருக்கு சோவியத் கம்யூனிச இயக்கம் பணம் அளிக்கிறது என்று எண்ணிக் கொண்டு பெரியாரின் இயக்கத்தை தடை செய்ய நினைத்து வந்த காலம்.
அதை அறிந்த பெரியார் ‘இயக்கத்தை காப்பாற்ற’ அமைதி காத்தார். இதைக் கண்ட அவருடன் பயணித்த சிலர் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் திருத்துறைப்பூண்டியில் 1936இல் நடைபெற்ற தஞ்சை மாநாட்டில் பெரியார் விளக்கமாக பேசினார். ஆனாலும் A.S.கண்ணப்பன், S.ராமநாதன், K.A.P.விசுவநாதம், P.பாலசுப்பிரமணியன், குருசாமி என வந்த பலர் எதிராக செயல்பட்டது மட்டுமல்லாமல் தனியாக பிரிந்து போய் சிலர் கட்சி ஆரம்பித்தார்கள். பிரிந்தவர்கள் வெற்றி பெறவில்லை. ஆனாலும் கருத்து வேறுபாடு கொண்டவர்களை எதிரியாக கருதாமல் மீண்டும் திருந்தி வருந்தி வரக்கூடும் என்று பெரியார் கருதி வந்தார்.
ஆயினும் ஒரு சிலர் வருமானவரித்துறைக்கு அழுத்தம் கொடுத்து பெரியார் திடல் உள்ளிட்ட சொத்துக்களை முடக்க நினைத்தனர் என்பது கூடுதல் தகவல்.
முன்பெல்லாம் ரயில் நிலையங்களில் பிராமணர்களுக்கு தனி உணவகம் இருந்து வந்தது. அதை மாற்ற அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதி 15 நாட்களில் நிலைமையை மாற்றினார்.
இயக்கம் இல்லாமல் கொள்கையை வைத்துக்கொண்டு முன் செல்ல முடியாது என புரிந்து கொண்ட பெரியார் இந்த மாதிரி சில போராட்டங்களை தொடர்ந்து கைவிடாமல் செய்து வந்து கொண்டிருந்தார்.
இந்த விவரங்களை எல்லாம் குருவிக்காரம்பை வேலு அவர்கள் புத்தக வடிவில் வெளியிட்டார். மேலும் கூடுதல் விவரங்களை – ஆசிரியர் கருத்துகளை Periyar Vision OTT-இல் முழுமையாக இன்றே பாருங்கள், பகிருங்கள். வணக்கம்.
– M.சாரங்கபாணி,
ராமநாதபுரம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
