‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, நவ. 12– ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திறன் பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் நேற்று (11.11.2025) நடைபெற்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 170 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள், ஊக்கத்தொகைக்கான காசோலை, பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன்படி, எல் அண்ட் டி, இந்திய கடற்படை, டிவிஎஸ், அய்அய்டிஎம், டிக்சன் தொழில்நுட்ப நிறுவனம், ஜெர்மன் கல்வி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ஹெச்.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 2,500 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

பின்னர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் இன்றைக்கு 60 ஆயிரம் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம், பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், இடைநின்றவர்கள், வேலையில் இருக்கின்றவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதேபோல், திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆடை, நகைவடிவமைப்பு, விவசாயம் என 35 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக, பயிற்சி பெறக்கூடியவர்களில் 72 சதவீதம் பேர் சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாயுமானவர் திட்டம்

‘தாயுமானவர்’ திட்டத்தின் பயனாளிகளுக்கு திறன் பயிற்சி கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசு காப்பகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற மாணவர்களுக்கும் அவர்களுடைய வேலைவாய்ப்புக்கு ஏற்றாற்போல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி அடிப்படையில் அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *