சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், தேர்தலுக்கான பொதுச் சின்னத்தை கோரி விண்ணப் பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சிகள்
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற வுள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப் பட்ட கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதில், தேர்தல் சின்னம் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதியில் இருந்து இது போன்ற கட்சிகள், சின்னம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்? என்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஒதுக்கீடு உத்தரவு
தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர் பான உத்தரவின்படி, ஒரு மாநிலத்தின் சட்டk;dw பதவிக்காலம் நிறைவடையும் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள தேதிக்கு 5 நாட்களுக்கு முன்புவரை, சின்னம் கேட்டு கட்சிகள் விண்ணப் பிக்க வேண்டும்.
அந்த வகையில் தேர்தல் நடக்க வுள்ள மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் முடிவடையும் தேதியும், அங்கீகரிக்கப்படாதபதிவு செய்யப்பட்ட கட்சிகள் தங்களுக்கான சின்னத்தை கேட்டு விண்ணப்பிக்க தொடங்க வேண்டிய தேதியும் வெளி யிடப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை. 10.5.2026 அன்று சட்டமன்ற பதவி காலம் முடிவடைவதால், நவம்பர் 11M;k தேதியில் இருந்து (நேற்று) சின்னத் திற்கான விண்ணப்பத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் அளிக்கலாம். புதுச்சேரி சட்டமன்ற பதவிக்காலம் 15.6.2026 அன்று நிறைவடைகிறது. எனவே அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அங்கு தங்களுக்கான சின்னத்திற்காக 16.12.2025 முதல் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
