மத்தியில் ஆட்சி, டில்லியிலும் பிஜேபி ஆட்சி, காவல்துறை முழுக்க உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.
மொத்த நிலப் பரப்பிலும், மக்கள் தொகைக் கணக்கீட்டிலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மிகக் குறைவாக உள்ள டில்லியில் தான் அதிகளவு காவல்துறையினர் பணியாற்றுகின்றனர்.
பத்தாததற்கு, IB,RAW,NIAவும் டில்லியின் பாதுகாப்பை கண்காணிக்கிறது.
டில்லியில் மொத்தம் 182 காவல் நிலையங்கள் உள்ளன. அதில் 19 சிறப்புப் பிரிவு செயல்படுகிறது. ஒரு காவல் நிலையத்தில் குறைந்த பட்சம் 400 காவல்துறையினர் பணியாற்றுகின்றனர்..
டில்லியில் அனுமதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை-94,249 பணியாற்றும் காவல்துறையின் எண்ணிக்கை -79,817.
டில்லி காவல் துறை (@DelhiPolice)-ல் காலியாகவுள்ள பணியிடங்கள் -14,432.
இந்தியாவில் வேறு எந்த மாநில காவல் துறையினருக்கும் இல்லாத அதிகாரத்தை டில்லி காவல்துறைக்கு வழங்கியுள்ளது ஒன்றிய அரசு
உண்மையில் ஒன்றிய அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தலைநகரின் பாதுகாப்பை கோட்டை விட்டுள்ளது.
என்ன சந்தேகம் என்றால் தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?
– கோ. கருணாநிதி
