பலூனை விழுங்கிய குழந்தை பலி
ராணிப்பேட்டை அருகே வீட்டில் விளையாடிய குழந்தை பலூனை விழுங்கியதால் உயிரிழந்துள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயது குழந்தை ஷியாம் துடிதுடித்ததை அறிந்து, பெற்றோர் ஹாஸ்பிடலிலுக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஷியாமின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் விளையாடும்போது மிகக் கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
