மாணவர்கள் சுலபமாக நெருப்புப் பற்றும் வஸ்துவைப் போன்றவர்கள். பஞ்சு, பெட்ரோல் போன்ற பொருள்களில் சுலபத்தில் தீப்பற்றிவிடும். அதைப் போன்ற உள்ளமுடையவர்கள் மாணவர்கள். எதை யார் சொன்னபோதிலும் அப்படியே சுலபத்தில் கிரகித்துவிடும் தன்மை அவர்களிடம் உண்டு. அதைப் போன்று மற்றவர்கள் வேறு எதையாகிலும் சொன்னால் முன்பு கிரகித்ததைக் கக்கிவிட்டு இப்போது கூறுவதை எடுத்துக் கொள்ளுவார்கள். எனவே அவர்களை சுலபத்தில் ஒரு வழிக்குக் கொண்டு வர முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’