11.5.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*கருநாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு 9 தனியார் நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
* எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்தார். துணை முதலமைச்சர் தேஜஸ்வியும் உடன் இருந்தார். ஒன்றிய அரசு, வரலாற்றுப் பாடங்களில் திரிபுவாதம் செய்வதை கடுமையாக எதிர்த்தார் நிதிஷ்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரு சமூகத்தில் ஒரு அடையாளக் குழுவிற்கான வெகுமதிகளின் பங்கு அவர்களின் மக்கள்தொகையின் பங்கிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது காந்தியார் கூறிய கொள்கை – 70 சதவீத இந்தியர்கள் ஓபிசி/எஸ்சி/எஸ்டி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றால், பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவமும் தோராயமாக 70 சதவீதமாக இருக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் பிரவீன் சக்கரவர்த்தி.
தி டெலிகிராப்:
* பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ அதிகாரி பிரதீப் குருல்கர் ‘ஆர்.எஸ்.எஸ். அடிப்படை தொண்டர்’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
* தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த வழக்குரைஞர் ஜி. மோகன் கோபால்,
* அரசின் முக்கிய தன்னாட்சி நிறுவனங்கள், ஹிந்து ராஷ்டிர சித்தாந்த வெறியர்களால் நிரப்பப்பட்டுள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குடியாட்சிக்குக் கேடாகும் எனவும் கருத்து.
-குடந்தை கருணா