கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா!

கந்தர்வகோட்டை நவ.12  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா நடைப்பெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரமுத்து வாழ்த்துரை வழங்கினார்‌. மாவட்ட துணைத் தலைவர் சதாசிவம் அறிவியல் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் துளிர் வாசகர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது மாணவர்கள் ‘கரையும் பனிக்கட்டி’ என்ற தலைப்பில் ரிதன்யா மாறன் என்ற மாணவியும், ‘கிறிஸ்டியன் டாப்ளர்’ என்ற தலைப்பில் கஜோல் என்ற மாணவியும்,‘பளபளக்கும் பனிக்கட்டி’ என்ற தலைப்பில் துர்கா என்ற மாணவியும்,‘சூரிய மண்டல கதை கேளு’ என்ற தலைப்பில் லாவண்யா என்ற மாணவியும், ‘என்று தேடல் தான்’ என்ற தலைப்பில் முகேஸ்வரன் என்ற மாணவரும், ‘காகித பறவை’ என்ற செயல்பாடுகளை ஜாஸ்மின் என்ற மாணவி செய்து காண்பித்தார்,

‘ச்சேய் ஒரு தூசி’ என்ற தலைப்பில் கோகுல சிவசிறீ என்ற மாணவியும், ‘விஞ்ஞானிகளின் குட்டிக்கதை’ ஜெயசிறீ என்ற மாணவியும், ‘அறிவியல் ஆத்திச்சூடி’ என்ற தலைப்பில் யோகேஷ் என்ற மாணவரும், ‘வெப்பநிலை உயர்வு’ என்ற தலைப்பில் ரகுனாசிறீ என்ற மாணவியும், ‘ஓசோன் படலத்தில் ஓட்டையாக’ என்ற தலைப்பில் பிரியதர்ஷினி என்ற மாணவியும், ‘காகித கொக்கு’ என்ற தலைப்பில் சுவேதா என்ற மாணவியும், ‘சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் சஞ்சீவி என்ற‌ மாணவரும், ‘ஒலி பெருக்கி அறையாய் கண்ணாடி அறை’ என்ற தலைப்பில் தமிழ் இனியா என்ற மாணவியும், ‘ஏன் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை’ என்ற தலைப்பில் கிருத்திகா என்ற மாணவியும், ‘செயற்கைக் கருப்பை’ என்ற தலைப்பில் சத்தியசிறீ என்ற மாணவியும்,‘மனிதர்களுக்கு இணையான காகங்களின் அறிவாற்றல்’ என்ற தலைப்பில் ஜீவிதா சிறீ என்ற மாணவியும், ‘பனிப்பாறைகள் ஏன் உருகுகின்றன’ என்ற தலைப்பில் தவசிறீ என்ற மாணவியும், ‘உங்கள் தலையில் ஒரு நேரம்; உங்கள் காலில் ஒரு நேரம்’ என்ற தலைப்பில் பூஜா சிறீ என்ற மாணவியும், ‘முழு சந்திர கிரகணம்’ என்ற தலைப்பில் தீபிகா என்ற மாணவியும், ‘சர்க்கரையை சூடு படுத்தினால்’ என்ற தலைப்பில் தங்களுடைய கட்டுரைகளைச் சமர்ப்பித்து திறனாய்வு செய்தனர்.

‘துளிர்’  திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளரும் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், செல்வி ஜாய், வெள்ளைச் சாமி,ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *