புதுடில்லி,மே11 – டில்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு டில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசரணையை மே-12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொல்லை புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரணுக்கு எதிராக ஏற்கெனவே டில்லி காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த புலன் விசாரணையை கண்காணிக்கவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீராங்களைகளின் வாக்கு மூலத்தை விரைவாக பதிவுசெய்ய கோரி வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை டில்லி தலைமை குற்றவியல் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மற்றும் புலன் விசாரணைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டில்லி காவல்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை மே-12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் புலன் விசாரணையை டில்லி தலைமை குற்றவியல் நீதிமன்றம் கண்காணிப்பது பற்றி தெரியவரும்.