டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அ.தி.மு.க. எஸ்.அய்.ஆர் விவகாரத்தில் போலி நாடகம் நடிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு; பாஜக – அ.தி.மு.க. கூட்டணி மக்களின் வாக்குரிமையை திருட திட்டமிடுவதாக பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்.அய்.ஆர். என்ற வோட் பந்தி நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என மம்தா வலியுறுத்தல்.
* தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி திமுகவுக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் புகார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “ஆர்எஸ்எஸ் பதிவு செய்யாதது வரி விலக்கு பெறவே. தாங்கள் சட்டத்தின் மேலாக, அரசியலமைப்பின் மேலாக இருக்க விரும்புகிறார்கள்.” என கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலடி.
தி இந்து:
* “உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தது சமாஜ்வாதி கட்சி தான். இப்போது எங்களின் இலக்கு 2027இல் ஒரு சமூகவாத அரசு அமைப்பதாகும். ஜனநாயகத்தை காப்பாற்ற 2027 தேர்தல் தீர்மானகரமானதாக இருக்கும்,” என்று லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் தெரிவித்தார்.
* “பீகார் தேர்தலின் முதல் கட்டம் முடிந்து நான்கு நாட்களாகியும், தேர்தல் ஆணையம் இன்னும் ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்களின் விபரத்தையோ, அவர்களின் வாக்கு சதவீதத் தையோ மக்களுக்கு வெளியிடவில்லை,” என தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* பீகார் தேர்தலில் பிரியங்கா மற்றும் ராகுல் காந்திக்கு பெரிய கூட்டங்கள் திரண்டது. மேலும் மக்கள் கவனம் வேலைவாய்ப்பு மற்றும் ஊழல் பிரச்சனைகளில் அதிகம் உள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* உ.பி.யில் வி.எச்.பி.யின் அடாவடி: மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை மிரட்டி, தண்டனை குறைப்பு: “மோசடி, மிரட்டல், வசூல்” குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டலப் பொறுப்பாளர் பிரின்ஸ் கவுருக்கு எதிரான கடுமையான பிரிவுகள் எஃப்அய்ஆரில் நீக்கப்பட்டன.
– குடந்தை கருணா
