
புறப்படு தோழா
புறப்படு!
இலால்குடி நோக்கிப்
புறப்படு!!
ஜாதியை ஒழிக்க
சட்டத்தை எரித்து!
சிறை சென்ற வீரர்கள்
நினைவைப் போற்றிட
புறப்படு தோழா
புறப்படு!
கீழவாளாடி நோக்கிப்
புறப்படு!
…
69 ஆண்டுகளானாலும்
தீரர்கள் கோட்டம்!
தியாகிகள் தோட்டம்!
சிறையினில் பிறந்த
சிறைப்பறவைக்கும்
தட்டப் பாறை சிறையில்
13 வயது கீழவாளாடி
பெரியசாமியும்!
கோவை சிறையில்
16 வயது நன்னிமங்கலம் கணேசனும்
உயிர்த் தியாகம்
செய்தது தெரியுமா
பட்ட இன்னல்கள் கொஞ்சமா!
சிறையிலிருந்து போய்விடு
என்று
கவர்னர் சொன்ன
போதும்
பெரியார் சொன்னால் மீண்டும்
சட்டத்தை கொளுத்தி
சிறைக்கு வருவேன்
என்று சொன்ன
புல்கானி பெரியசாமி
தெரியுமா?
300 தீரர்கள்
சிறைக்கு சென்ற
லால்குடி
தியாக பூமி நிறைத்திட
புறப்படு தோழா
புறப்படு!
லால்குடி நோக்கிப் புறப்படு!!
வருகிற நவம்பர் 26
ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்கம்
செலுத்துவதோடு
ஆணவப் படுகொலை
தடுப்பு சட்ட ஆணையம்
அமைத்த தமிழ்நாடு முதல்வருக்கு
பாராட்டு விழாவும் நடத்திட
புறப்படு தோழா
புறப்படு!
கீழவாளாடி
நோக்கிப் புறப்படு!!!
தமிழர் தலைவர் ஆணையை ஏற்று
குடும்பம் குடும்பமாய்
வந்திடுவோம்!
குறையாத பெரியார்
வீரத்துடனும்
குன்றாத
அறிவுத்
தீரத்துடனும்
அலைகடலென புறப்படு!
ஆரியம் அழியட்டும்!
திராவிடம் தழைக்கட்டும்!
வெல்க பெரியார் வாழ்க பெரியார்
புறப்படு தோழா! புறப்படு!!
லால்குடி நோக்கிப் புறப்படு!!!!
ச. மணிவண்ணன்,
மாவட்ட தலைவர்
திராவிடர் கழகம், துறையூர்
