தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய். ஆர். அய் எதிர்த்து
தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை சைதாப்பேட்டையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு

சென்னை, நவ.11 ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைபாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய்.ஆர்.–அய் எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  இன்று (11.11.2025) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவர்

சென்னை சைதாப்பேட்டை (கலைஞர் பொன் விழா வளைவு) பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டி யன், மருத்துவர் கனிமொழி சோமு, திண்டுக்கல் அய். லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர்
சோ. சுரேஷ், நெய்வேலி ஞானசேகரன், கரு அண்ணாமலை, டைலர் கண்ணன் மற்றும் தோழர்கள் கலந்து
கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொறுப்பாளர்களும், தோழர்க ளும் பெருமளவில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *