சென்னையில் விளையாட்டு அறிவியல் பன்னாட்டு மாநாடு

2 Min Read

அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு

சென்னை, நவ. 8- சென்னை யில் விளையாட்டு அறிவியல் பன்னாட்டு மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பன்னாட்டு விளை யாட்டு அறிவியல் கருத்த ரங்கு நேற்று (7.11.2023) சென்னையில் துவங்கி, இன்றும் நடக்கிறது. இதை, தமிழ்நாடு இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது: 

விளையாட்டு அறிவியல் குறித்து, நாட்டின் முதல் பன்னாட்டு கருத்த ரங்கம் துவங்கி உள்ளது. இதில் பங்கேற்றுள்ள பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா, கனடா உள் ளிட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள 250க்கும் மேற்பட்ட விளையாட்டு அறிவியல் வல்லுநர்கள், விளையாட்டு வீரர்களின் நலவாழ்வு மற்றும் வெற் றிக்கு வழி காட்டுவர். விளையாட்டு துறையில் அறிவியல் முன்னேற் றத்தை உட்படுத்தும் வகையில், சென்னை, ஜவ ஹர்லால் நேரு விளை யாட்டு அரங்கில், தமிழ் நாடு விளையாட்டு அறிவியல் மன்றம் துவங்கப் பட உள்ளது. 

இதனால், விரைவில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய அளவில் மட்டுமல் லாமல், பன்னாட்டு அள வில் தரமான வீரர், வீராங் கனையரை உருவாக்க முடியும். தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக் கான கொள்கை உரு வாக்கப்படும். பன்னாட்டு போட்டிகளை நடத்த, சென்னையில் பன் னாட்டு விளையாட்டு நகரம் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்க, ஆறு மாவட் டங்களில் பாரா விளை யாட்டு அரங்கங்கள் உரு வாக்கப்படும். 

இந்த கருத்தரங்கில், விளையாட்டு துறைக் கான மருத்துவம், மறு வாழ்வு, நிர்வாகம் மற்றும் மேம்பாடு, பயோமெக் கானிக்ஸ், உடலியல், ஊட்டச்சத்து, உயர் செயல்திறன் விளையாட் டுப் பயிற்சி, விளையாட்டு தொழில்நுட்பம், இ – -விளையாட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர் களும் உலக அரங்கில் விளையாட்டு போட்டிக ளில் வெற்றிபெற்று பிர காசிக்க தேவையான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை, விளையாட் டில் பயன்படுத்தி, தமிழ் நாட்டிற்கும், இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில், இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம் பாட்டு ஆணைய உறுப் பினர் செயலர் மேகநாத ரெட்டி, துப்பாக்கி சுடு தல் வீரர் அபினவ் பிந்த்ரா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, மருத்துவ, விளையாட்டு பல்கலைகளின் துணை வேந்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *