சென்னை, மே 12, 2023-2024ஆம் கல்வி யாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 13, 14 ஆகிய தேதிகளில், சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மய்யத்தில் நடைபெறும் அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சியில் வழங்கப் படும். இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி பொறியியல் கல்லூரிகளும் இடம்பெறும். எம்.பி. பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும்.
இந்தக் கண்காட்சி தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெற உள்ளது. மே 16-ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஓட்டலிலும்; மே 17-ஆம் தேதி
திருச்சி ஃபெமினா ஓட்டலிலும்; மே 18-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஓட்டலிலும், மே 19-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரெஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க: 9282 221 221.
இது குறித்து நேற்று (11.5.2023) சென்னையில் உள்ள தென்னிந்தி யாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் கூறுகையில், “உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாக நற்பெயரை பெற்றுள்ளன. விரிவான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் நாட்டில் மருத்துவக் கல்வியை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வலுவான கற்றல் சூழலை ரஷ்யப் பல்கலைக் கழகங்கள் வழங்குகின்றன.
கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். மதிப்புமிக்க, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, குறைந்த கட்டணத்தில் கல்வி பெற எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிக்க வருகை தருகிறார்கள்” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஒலெக் நிகோலயேவிச் சென்னை ரஷ்ய மாளிகையின் இயக்குநரும் துணைத் தூதருமான ரோகலேவ் கெனடி ஆண்ட்ரீவிச் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் கிரெச்கோ ஓலிஸ்யா கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பொது நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் தைமூர் ருஸ்த மோவிச் அக்மதேவ் ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சி. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாடு நீக்கம்
புதுடில்லி,மே12- நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டை நீக்கி ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடங்களின் புதிய பட்டியலில் தமிழ் நாடு இடம்பெறவில்லை. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி கை விடப்படுவதாக ஏற்கெனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.