சென்னை, நவ.10- நேற்று (நவம்பர் 9) தனது 36ஆவது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி கொண்டாடினார்.
அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தம்பி தேஜஸ்விக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்ப வராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.
தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தி யாயத்தின் விளிம்பில் பீகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம்.
இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
