நேற்று (9.11.2025) மறைவுற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் ‘வானவில்’ மணி அவர்களின் வாழ்விணையர் வெற்றிச்செல்வி, மகன் பொறியாளர் கதிரவன் ஆகியோரிடம் சிங்கப்பூரிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் ‘வானவில்’ மணியின் மறைவிற்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் ‘வானவில்’ மணியின் மறைவிற்கு மகன் பொறியாளர் கதிரவனிடம் இரங்கல் கூறி, ஆறுதல் தெரிவித்தார்.
