திருப்பூர், நவ. 10- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 07-11-2025 இரவு 7 மணி அளவில் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது
திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார், திருப்பூர் மாநகரத் தலைவர் கருணாகரன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
மாவட்ட ப.க. தலைவர் வேலு.இளங்கோவன், மாவட்ட ப.க. செயலாளர் நாச்சிமுத்து, மாவட்ட ப.க.அமைப்பாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கிருஷ்ண வேணி, திருப்பூர் மாநகர செயலாளர் செல்வராஜ், திருப்பூர் மாநகர துணை செயலாளர் கணேசன், புத்தக நிலைய பொறுப்பாளர் மைனர் ஆகியோர் உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியார் உலகம் மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்து கருத்துரை யாற்றினார்.
மாவட்ட காப்பாளர் அவிநாசி ராமசாமி 5 விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ 10,000 வழங்கினார்.
தீர்மானங்கள்
தென்னூர் முத்து, அவினாசி அங்கமுத்து ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு பொதுமக்களிடம் நன்கொடை திரட்டி ரூ 10 லட்சம் வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.
நவம்பர் 22இல் பொள்ளாச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் டிசம்பர் 2 அன்று (சுயமரியாதை நாள்) மிக எழுச்சியுடன் கொண்டாடு வது என முடிவு செய்யப்பட்டது.
