திராவிடர் கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை .அவர்களின் பெயரனும், பள்ளிக்கரணை சாந்தி (ராணி) – சம்பத்குமார் இணையரின் மூத்த மகனுமான பிரவீன் குமார் (வயது 42) நேற்று (9.11.2025) இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவருக்கு பொன்மணி என்ற மனைவி, நலம்மித்ரா என்ற 9 வயது மகளும் உள்ளனர். வைக்கம் குமார் என்ற தம்பியும் உள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாநிலம் கேட்டி நகரத்தில் (Katy city) மூளைச் சாவு காரணமாக இறந்தார். மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரை மறைந்த அதே நாளில் இவரும் மறைந்து உள்ளார்.
