நாகர்கோவில், நவ. 10- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மக்களின் வாக் குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கி உரை யாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இது தான் ஆர்.எஸ்.எஸ்,பாஜக – இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மக் களுடைய வாக்குரிமையை பறிக்கும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து பேசினார். மேலும் தந்தை பெரியாருடைய தொண்டுகள், தந்தை பெரியாருடைய உழைப்பால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், பெரியார் என்றும் ஏன் தேவைப்படுகிறார் என விரிவாக உரையாற்றினார்.
திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பி ரமணியம ்,துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், காப்பாளர் ஞா.பிரான்சிஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கோட் டாறு பகுதி தலைவர் ச.ச மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர். கழக பொறுப்பாளர்கள் செல்லையா, மு.பால் மணி, இரா.லிங்கேசன், இரா.முகிலன் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் நன்றியுரையாற்றினார்.
பகுத்தறிவாளர்கழகம் சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து சிறப்புக் கூட்டம்
Leave a Comment
