திருவாரூர், நவ. 10- சோழங்க நல்லூர் வெள்ளை மஹாலில் 07-11-2025 அன்று காலை 10:30 மணி அளவில் திருவாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் கா.கவுத மன், தலைமையேற்றும், ஒன்றிய செயலாளர் செ.பாஸ்கரன், அனைவரையும் வரவேற்றும், ஒன்றிய துணை செயலாளர் வ.சாம்பசிவம், கடவுள் மறுப்பு யும் உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, நோக்க உரையாற்றினார்.
மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், ஆகி யோர் கருத்துரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் இரா.மகேஸ்வரி, மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சீ.சரசுவதி, ஒன்றிய துணைத் தலைவர் கு.இராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
சூரனூர் கிளை தலைவர் மகாலிங்கம், கனகராஜ், மாவட்ட ஆலோசர்கள் கோவிந்தசாமி, சூரனூர் கிளை செயலாளர் மனோகர், திமுக மய்யக் கமிட்டி செயலாளர் தங்கசாமி, திமுக ஒன்றிய வர்த்தகரணி அமைப்பாளர் இளங்கோவன்,ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
சோழங்கநல்லூர் பகுதி கிளை பொறுப்பாளர் ராவு, ஒன்றிய மகளிரணி தலைவர் க.சரோஜா,சைனம்பு, தேனம்மா, அன்னதானம், ஆசிகா, செந்தில்குமார், ரெங்கசாமி, ரத்தினம், செந்தில்குமாரி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிரணி கிளை தலைவர் அமுதா, நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
திருவாரூர் மாவட்டம் ஆமூர் பெரியார் பெருந்தொண்டர் அருமைநாதன் மறைவிற்கு இக் கூட்டம் வீர வணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரி விக்கிறது
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவு செய்யப் பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சி யில் திருச்சி சிறுகனூரில் அமைய விருக்கும் பெரியார் உலகத்திற்கு திருவாரூர் மாவட்ட. – திருவாரூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பெரும் நிதி திரட்டி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 07இல் நன்னிலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பளித்து.
பொதுக் கூட்டத்திற்கு கழகத் தோழர்களை குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிக்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 02இல். 93ஆவது பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் பிறந்த நாளை திருவாரூர் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் மிகுந்த எழுச்சியுடன் உற்சாகமாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர் ஒன்றியம் முழு வதும் விடுப்பட்ட உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ். விடுதலை சந்தாவை புதுப்பிப்பது எனவும், மேலும் புதிய சந்தாக்களை சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் இரா.மகேஸ்வரி, பெரியார் உலகத்திற்க்கு முதற்கட்டமாக நிதி வழங்கி மகிழ்ந்தார்.
தலைமை செயற்குழு கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, திருவாரூர் ஒன்றிய கழகம் சார்பில் ஏராளமான கழகத் தோழர்கள் சிறப்பு செய்தனர்.
